ஊழல் குற்றம் புரிந்த இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து மறுப்பு!

0
142
Britain Refuses Send 3 Indian Money Corruption Accuses

(Britain Refuses Send 3 Indian Money Corruption Accuses)

கடந்த 2000-ம் ஆண்டு இந்தியா-தென் ஆப்பிரிக்க நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடந்த ஒரு நாள் போட்டி தொடரில் பெருமளவில் சூதாட்டம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் சூதாட்ட தரகரான சஞ்சீவ் குமார் சாவ்லா இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.

இதேபோல் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிந்தபோது சுமார் ரூ.20 லட்சத்தை தங்களுக்கு கடனாக வழங்கி மோசடி செய்த தம்பதியர் ஜதீந்தர்- ராணி அங்குராலா ஆகியோரும் தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றனர்.

இந்த 2 வழக்குகள் தொடர்பாக மூவர் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து உள்ளது. இவர்களை வழக்கு விசாரணைக்காக நாடு கடத்துமாறு இந்திய அரசு விடுத்த கோரிக்கையை அண்மையில் இங்கிலாந்து நிராகரித்தது.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில் சஞ்சீவ் குமார் சாவ்லா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் இந்திய தம்பதி ஜதீந்தர்-ராணி அங்குராலா ஆகியோரும் அங்கு மேன்முறையீடு செய்த காரணத்தால் , அவர்களை நாடுகடத்த இங்கிலாந்து அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவையும் நாடு கடத்துமாறு இந்திய அரசு கோரியுள்ளது.

Image result for Britain Refuses Send 3 Indian Money Corruption Accuses

விஜய் மல்லையா தவிர, தற்போது இந்தியாவின் நாடு கடத்த கோரும் வழக்கில் ராஜேஷ் கபூர், டைகர் ஹனீப், அதுல் சிங், ராஜ்குமார் பட்டேல், ஷேக் சாதிக் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here