‘பாரடைஸ்’ ஆவணங்கள் மூலம் அம்பலமாகிய பிரபலங்களின் முதலீடுகள்!

0
289
PARADISE PAPERS RELEASE DISCLOSES SECRET INVESTMENTS

(PARADISE PAPERS RELEASE DISCLOSES SECRET INVESTMENTS)

சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, 95 ஊடக பங்குதாரர்கள் இணைந்து, வெளிநாடுகளிலுள்ள வரிச்சலுகையைப் பயன்படுத்தி, பிரபலங்கள் பலர் வெளிநாடுகளில் முதலீடு செய்தமைக்கான ஆவணங்களை ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.

இதில் உலக தலைவர்கள், தொழில் அதிபர்கள், கம்பெனிகள் என 31000 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் 2004-2007 ஆண்டுகளில் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த சவுக்கத் அஜிஸின் (வயது 68) பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இவர் தனது மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தை ஆகியோரின் பெயரில் அமெரிக்காவில் டெலாவரே மாகாணத்தில் அண்டார்க்டிக் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் வாயிலாக முதலீடுகள் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் தனியார் எஸ்டேட்டும் இந்த ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ ஆவணங்களில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தனியார் எஸ்டேட் சார்பில் பல லட்சம் பவுண்டுகள், வெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி முதலீடு செய்யப்பட்டுள்ளனவாம்.

கிட்டத்தட்ட 10 மில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் (13 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பிரிட்டன் அரசியின் சொந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதை பாரடைஸ் பேப்பர்ஸ் ஆய்வு காட்டுகிறது.

இந்தப் பணம் கேமேன் தீவுகள் மற்றும் பெர்முடாவில் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராணிக்கு வருமானம் கிடைக்கிறது. மேலும், இந்த வருமானம் 500 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள மகாராணியின் சொந்த எஸ்டேட்டுக்கு தேவையான முதலீடுகளை பார்த்துக் கொள்கிறது.

தனது தனியார் எஸ்டேட்டில் அரசி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக அந்த பத்திரங்களை ஆய்வு செய்யும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here