வகுப்பறைக்குள் கார் புகுந்தது! அவுஸ்திரேலியா பள்ளியில் மாணவர்கள் பலி!

0
193
Vehicle Enters Class Room Two Australia Students Dead

(Vehicle Enters Class Room Two Australia Students Dead)

அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னியில் பாங்க்சியா ரோட்டில் உள்ள ஒரு பள்ளிகூடத்தில் கார் புகுந்து சம்பவித்த விபத்தில் இரு சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

அங்குள்ள வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்த வேளை அதிவேகமாக வந்த கார் பள்ளிக்குள் நுழைந்தது. பின்னர் உள்ளே தாறுமாறாக ஓடி அங்கிருந்த ஒரு வகுப்பறையில் மோதி புகுந்தது. அது மரத்தினால் உருவாக்கப்பட்டிருந்தது.

Vehicle Enters Class Room Two Australia Students Dead

அதனால் அந்த வகுப்பறை நொறுங்கியது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுவர்கள் காயம் அடைந்தனர். அனைவரும் வெஸ்ட் மெட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த காரை அதிவேகமாக ஓட்டி வந்தது 52 வயது பெண் டிரைவர் என தெரியவந்தது. அவர் மது போதையில் இருந்தாரா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here