அமெரிக்க ஆயுதங்கள் வடகொரிய ஏவுகணைகளை வானத்தில் அழிக்கும்! ஜப்பானுக்கு டிரம்ப் உறுதியளிப்பு!

0
153
American President Trump Says US Arms Destroy North Korea Missiles

(American President Trump Says US Arms Destroy North Korea Missiles)

வடகொரியாவின் ஏவுகணைகளை அமெரிக்க ஆயுதங்கள் மூலம் ஜப்பான் வானத்தை விட்டு துரத்தியடிப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கவின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக கிழக்காசிய நாடுகளுக்கு டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்லும் அவர் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ள ஆசிய ஒத்துழைப்பு உச்சிமாநாடுகளில் பங்கேற்கிறார்.

தனது பயணத்தில் முதல் நாடாக ஜப்பான் சென்றுள்ள டிரம்ப் அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

American President Trump Says US Arms Destroy North Korea Missiles

பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் டிரம்ப் – அபே இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த டிரம்ப் , அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் வடகொரியாவின் ஏவுகணைகளை ஜப்பான் வானத்தை விட்டு வெளியே விரட்டியடிக்கும்.என கூறினார்.

மேலும், ஜப்பான் மற்றும் தென்கொரியா அதிகளவிலான நவீன ஆயுதங்களை வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here