ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைக்கு ஈரானை குற்றம் சாட்டும் சவூதி!

0
492
Yemen Houthi Missile Attack Saudi Prince Accuses Iran

(Yemen Houthi Missile Attack Saudi Prince Accuses Iran)

ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணை ஒன்று சவூதி விமான நிலையத்தை தாக்க முற்பட்ட விடயம் தொடர்பில் , சவுதி அரசு ஈரான் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

இளவரசர் முகமத் பின் சல்மான்

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளை வழங்கி உதவுவதன் மூலம் தங்கள் நாட்டுக்கு எதிரான நேரடி ராணுவத் தாக்குதலில் இரான் ஈடுபட்டுள்ளது என்று சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் கூறியுள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணை ஒன்று, சவூதி தலைநகர் ரியாத் அருகே, கடந்த சனிக்கிழமையன்று வானில் தடுத்து அழிக்கப்பட்டது.

Image result for Yemen Houthi Missile Attack Saudi Accusing

ஏமன் எல்லைக்குள் இருந்து 850 கிலோ மீட்டர் தொலைவிலும், ரியாத் நகரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும், மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ‘பர்கான் ஹெச்-2’ வகை பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை கிளர்ச்சியாளர்கள் ஏவியதாக சவூதி தெரிவித்திருந்தது.

சவூதி பாதுகாப்பு படைகள் அதை நடு வானில் தடுத்தாலும், அதிலிருந்து சிதறிய சில துண்டுகள் விமான நிலையத்தினுள் விழுந்தன.

கடந்த 2015 முதல் ஏமன் அரசை ஆதரிக்கும் சவூதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து போரிட்டு வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கியதாக கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

பயணிகள் விமான நிலையம் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவது வெளிப்படையான போர் குற்றம் என்று மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

சவூதி இளவரசரின் கூற்று மிகவும் ‘ஆபத்தானது’ என்று இரான் வெளியுறவு அமைச்சர் மொகமத் ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார்.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here