அணு ஆயுதப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் ! டிரம்ப் தெரிவிப்பு!

0
163
American President Donald Trump Visits South Korea

(American President Donald Trump Visits South Korea)

ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு தென்கொரியாவில் ஓசன் விமானப்படை தளத்தில், மனைவி மெலனியா டிரம்புடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சென்று தரை இறங்கினார்.

பின்னர் , தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் அங்கு கேம்ப் ஹம்ப்ரேஸ்சில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

American President Donald Trump Visits South Korea

அங்கு அவர் அமெரிக்கா மற்றும் தென்கொரியா வீரர்களை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் அங்கு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் வடகொரியா விவகாரம் தொடர்பாக ராணுவ தளபதிகளை சந்தித்து பேசியது தொடர்பாக குறிப்பிடுகையில், “கடைசியில் இதுதான் நிச்சயம் வேலை செய்யும். இதுதான் எப்போதும் வேலை செய்யும். அது வேலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். ஆனால் இதுபற்றி அவர் விரிவாக எதுவும் குறிப்பிடவில்லை.

இதன் பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சீனாவை சென்றடைந்தார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here