ஜெர்மனியில் மனைவியை கொடுமைப்படுத்தி லைவ் வீடியோ விட்ட நபர்!

0
1265
German Indian Origin Man Abuses Wife While Web Cam Broadcasting

(German Indian Origin Man Abuses Wife While Web Cam Broadcasting)

ஜெர்மன் நாட்டில் வெப்காம் மூலம் நேரலையில் தனது மனைவியை கொடுமைப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஜேர்மனியின் முனிச் நகரில் ககன்தீப் என்பவர் தனது மனைவியிடம் சீதனம் கேட்டு தொடர்ச்சியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் , கடந்த வெள்ளி இரவு உல்ளூர் நேரப்படி 11 மணி அளவில் இந்தியாவில் டெல்லியில் குடியிருக்கும் மனைவியின் பெற்றோரை வெப்காம் லைவ் வீடியோவுக்கு அழைத்த ககன்தீப், தமது சகோதரருடன் இணைந்து மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

German Indian Origin Man Abuses Wife While Web Cam Broadcasting

இதனையடுத்து , அந்த பெண்ணின் பெற்றோர் முனிச் நகரில் இருக்கும் தமது நண்பர் ஒருவர் மூலம் போலீசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், 35 வயதுடைய ககன்தீப் மற்றும் அவரது சகோதரர் 21 வயதுடைய அமன்தீப் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் கைது செய்த பொலிசார் துன்புறுத்துதல், மிரட்டல் விடுத்தல், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ககன்தீப் ஜெர்மனியில் பாதுகாப்பு வீரராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here