பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் பலி!

0
163
Pakistan Punjab Province Bus Accident Killed 27 People

(Pakistan Punjab Province Bus Accident Killed 27 People)

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கல்லார் காகர் பகுதியில் நேற்று இரவு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ராய்விண்டில் நடைபெற இருந்த மத பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு 100-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்து இஸ்லாமாபாத்-லாகூர் சாலை வழியாக செல்வதாக இருந்தது. பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் இரவு 10 மணிக்கு மேல் அந்த சாலை மூடப்பட்டது.

எனவே, ஓட்டுநர் வேறு வழியாக சென்றுள்ளார். அவருக்கு அந்த பாதை பழக்கம் இல்லாததால் அங்கு பள்ளம் இருப்பதை கவனிக்கவில்லை. பேருந்தானது அந்த பகுதியில் இருந்த சரிவில் மிக வேகமாக செல்லும் போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்தது.

A bus fell into a ravine while it was passing through a slope in Punjab province in Pakistan on Wednesday night. (Representational Image | PTI)

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 69 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பஞ்சாப் முதலமைச்சர் சேபாஸ் ஷெரிப் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here