கொல்கத்தா-வங்கதேசம் இடையே 43 ஆண்டுகளுக்கு பிறகு புகையிரத சேவை!

0
241
India Kolkata Bangladesh Train Service Restarted 43 Years Break

(India Kolkata Bangladesh Train Service Restarted 43 Years Break)

கொல்கத்தா – குல்னா ஆகியவற்றிற்கிடையே 43 ஆண்டுகளுக்கு பிறகு  மீண்டும் புகையிரத போக்குவரத்து தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில், வங்கதேசம் பாகிஸ்தானுடன் இணைந்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்த போது கொல்கத்தா- குல்னா இடையே பயணிகள் மற்றும் சரக்கு புகையிரத போக்குவரத்து இருந்துள்ளது.

ஆனால் வங்காளதேசத்தின் சுதந்திரத்துக்காக இந்தியா- பாகிஸ்தான் போர் நடைபெற்ற போது இப் புகையிரதப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் 11-ந்தேதி இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ‘ஷேக் ஹசீனா’, இந்தியப் பிரதமர் ‘நரேந்திரமோடி’யுடன் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 43 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா- குல்னா இடையே மீண்டும் புகையிரத போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது.

India Kolkata Bangladesh Train Service Restarted 43 Years Break

வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக்ஹசீனா, மேற்குவங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்ததுடன், டாக்கா சிட்டகாங் பாதையில் மேக்னா மற்றும் டிடாஸ் ஆறுகள் இடையே புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புகையிரத பாலங்களையும் திறந்து வைத்தனர்.

தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி இந்த புகையிரத போக்குவரத்தின் மூலம், இந்தியா-வங்காள தேசம் இடையேயான உறவு வலுப்படும் என்றார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசும் போது, இன்று இரு நாடுகளுக்குமிடையேயான உறவின் மிகப் பெரிய நாள் என குறிப்பிட்டார்.

மீண்டும் தொடங்கப்பட்டுள்ள கொல்கத்தா- குல்னா புகையிரதப் போக்குவரத்து 172 கி.மீட்டர் தூரமாகும். அதில் ‘குளுகுளு’ வசதியுடைய புகையிரதம் இயக்கப்படுகிறது; அதில் 456 இருக்கைகள் உள்ளன.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here