காங்கோவில் எரிபொருள் சரக்கு இரயில் பள்ளத்தில் சரிந்து 33 பேர் பலி!

0
239
Congo Fuel Carrying Train Accident Killed 33 People

(Congo Fuel Carrying Train Accident Killed 33 People)

காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற இரயில் ஒன்று பள்ளத்தில் சரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஆபிரிக்க நாடான காங்கோ அதிக அளவிலான கச்சா கனிம வளங்கள் கொண்ட நாடாகும்.

காங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு நேற்று ஒரு சரக்கு இரயில் 13 பெட்டிகளில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது.

இந்த சரக்கு இரயிலில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர். அந்த இரயில் லுபுடி என்னுமிடத்தில் சரிவில் ஏறியபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டது.

Congo Fuel Carrying Train Accident Killed 33 People

தடம்புரண்ட அந்த இரயில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து, தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த இரயிலில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அது சரக்கு இரயில் என்பதால் அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவர் என மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேபோன்று , கடந்த 2014-ம் ஆண்டு ஒரு சரக்கு இரயில் தடம்புரண்ட விபத்தில் 74 பேர் உயிரிழந்ததோடு 174 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here