தென்காசியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

0
1083
School Girls Complaint Tution Master Sexual Abuses

(School Girls Complaint Tution Master Sexual Abuses)

இந்தியா தென்காசியில் மாணவிகளுக்கு டியுசன் சொல்லி கொடுப்பதாக பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவர் மீது மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

தென்காசி அருகே இலஞ்சி கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ராஜ் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் வாடகை வீட்டில் தங்கி மாணவிகளுக்கு டியுசன் சொல்லிகொடுத்துள்ளார்.அப்போது தன்னிடம் படிக்க வந்த மாணவிகளிடம் தகாத முறையில் பேசியும் பாலியல் ரீதியில் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார்.

School Girls Complaint Tution Master Sexual Abuses

இதனையடுத்து தொல்லை கொடுத்த அந்த ஆசிரியர் பற்றி தலைமை ஆசிரியரிடம் மாணவிகள் புகார் அளித்தனர்.

ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விஷயம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது.

பிறகு தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தப்பி ஓடிய ஆசிரியர் ராஜ் மற்றும் பள்ளியின் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here