ஆறு முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை! கலிபோர்னியா நீதிமன்று உத்தரவு!

0
317
California Court Bans Six Muslim Countries People Enter America

(California Court Bans Six Muslim Countries People Enter America)

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள், சில முஸ்லீம் நாடுகள், மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவிற்குள் நுழையக்கூடாது என பரபரப்பு உத்தரவை பிறப்பித்திருந்தார்.

டிரம்பின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் எழுந்ததுடன், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் முடிவில் டிரப்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

California Court Bans Six Muslim Countries People Enter America

இருந்தாலும் கடந்த அக்டோபர் 19ம் திகதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பயணிகளும், வெனிசுலாவை சேர்ந்த குறிப்பிட்ட சில அதிகாரிகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நுழையக்கூடாது என ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை விதித்தார்.

பிற நாட்டு பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்று கூறி ஹவாய் மாகாண அரசு உள்ளூர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிரம்பின் இந்த கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் கலிபோர்னியா உள்ளூர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ‘அமெரிக்காவுடன் தொடர்பில் இல்லாத ஆறு நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை’ விதித்து உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் உத்தரவின்படி ‘ஈரான், சிரியா, லிபியா, ஏமன், சோமாலியா, சாத் ஆகிய ஆறு முஸ்லீம் நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதோடு; தடைவிதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் இரத்த சொந்தங்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு’ அளிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப், முன்னதாக வெளியிட்ட பயணத்தடை பட்டியலில் இடம்பெற்றிருந்த வடகொரியா மற்றும் வெனிசுலா பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here