சிரியா வான் தாக்குதல்களில் 43 பேர் பலி!

0
190
Syria Military Air Strike Attack Killed 43 Innocent People

(Syria Military Air Strike Attack Killed 43 Innocent People)

சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அலிப்போ மாகாணத்தில் சிரியா விமான படை நடாத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகியுள்ளனர்.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் அலிப்போ மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள அல்-அடாரெப் நகரில் நேற்றிரவு ஒரு மார்கெட்டை

Syria Military Air Strike Attack Killed 43 Innocent People

குறிவைத்து நடத்தப்பட்ட மூன்று வான்வழி தாக்குதலுல் 43 பொதுமக்கள் உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வளையம் அமைப்பதற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், இந்த தாக்குதலினால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது போன்ற தாக்குதல்களில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here