மியான்மர் கலவரத்துக்கு காரணமான தனிநபர்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு!

0
154
America Decided Ban Myanmar Violence Influenced People

(America Decided Ban Myanmar Violence Influenced People)

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஒருநாள் பயணமாக இன்று மியான்மர் நாட்டின் தலைநகரான மணிலா வந்தடைந்தார்.

அந்நாட்டின் இராணுவ அதிகாரிகள், ரோஹிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து பேசினார்.

இதனையடுத்து, அந்நாட்டின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஆங் சான் சூகியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒட்டுமொத்தமாக மியான்மர் நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வருகின்றன.

ஆனால், இது அதற்கான நேரம் இல்லை. நடந்த சம்பவங்கள் கொடூரமானவை. மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக நம்பகமான விசாரணை வேண்டும்” என வலியுறுத்தினார்.

America Decided Ban Myanmar Violence Influenced People

அத்தோடு “இந்த வன்முறைக்கு காரணமான தனிநபர்கள் மீது தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலனை செய்யும்” என உறுதியளித்ததுடன், “அப்படி தனிநபர்களுக்கு எதிராக தடை விதிக்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நம்பக்கத்தன்மை கொண்ட உரிய ஆதாரங்கள் தேவைப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்.

வங்காளதேச நாட்டிலிருந்து குடிபெயர்ந்து மியான்மரில், பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

Image result for America Decided Ban Myanmar Violence Influenced People

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும்போது பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

மியான்மரிலுள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆவணி மாதம் 25ம் திகதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்துள்ளது.

மியான்மரில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here