கிரீஸ் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு: 14 பேர் உயிரிழப்பு!

0
163
Greece Heavy Raining Flood Killed Fourteen People

(Greece Heavy Raining Flood Killed Fourteen People)

கிரீஸ் நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளும் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளன.

சைமி தீவில் தொடர்ந்து பெய்த தொடர் மழையால் வீடுகள், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்ததுடன், வாகனங்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ஏதென்ஸ் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று நள்ளிரவில் திடீரென கனமழை பெய்தது.

Image result for Greece Heavy Raining Flood Killed Fourteen People

இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Greece Heavy Raining Flood Killed Fourteen People

இந்த உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஜ், இது தேசிய துக்க நாள் என அறிவித்தார்.

இன்றும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here