ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து – குழந்தை உள்பட 6 பேர் பலி!

0
245
Russia Mini Passengers Flight Accident Killed 6 People

(Russia Mini Passengers Flight Accident Killed 6 People)

ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் மாகாணத்தில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ள நெல்கன் என்ற கிராமத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

காபரோவ்ஸ்க் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 19 பேர் செல்லக்கூடிய சிறிய ரக விமானம் உள்ளூர் நேரப்படி பகல் 1 மணிக்கு விபத்துக்குள்ளானது.

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து விட்ட இந்த விமானம் கீழே நொறுங்கி விழுந்துள்ளது.

Russia Mini Passengers Flight Accident Killed 6 People

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், விமானத்தின் கருப்புப்பெட்டி மீட்கப்பட்டு ஆய்வு செய்த பின்னர் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here