சிம்பாவேயில் இராணுவம் ஆட்சியை பிடித்தது! அதிபர் முகபே சிறைபிடிப்பு

0
258
Zimbabwe Robert Mugabe Under House Arrest Military Control Government

(Zimbabwe Robert Mugabe Under House Arrest Military Control Government)

ஆபிரிக்க நாடான சிம்பாவேயில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980-ம் ஆண்டு முதல் அதிபராக இருக்கும் முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவ படைகளால் சிறைப்பிடிக்கப்படுள்ளனர்.

Zimbabwe Robert Mugabe Under House Arrest Military Control Government

சிம்பாவேயில் ராபர்ட் முகபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வருகிறார்.

அதிகாரத்தை தனது வசம் கொண்டு வர முயற்சிப்பதாக கூறி அந்நாட்டு துணை அதிபர் எம்மர்சன் நாங்காவாவை கடந்த வாரம் முகபே பதவி நீக்கம் செய்தார்.

இதனால், ஆளும் ஷானு – பி.எப் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக நின்றார். இதனால், அந்நாட்டு அரசியலில் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை தலைநகர் ஹரரேவை இராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. அதிகளவிலான இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தலைநகரை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர்.

அந்நாட்டு அரசு ஊடக தலைமையகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.

பாராளுமன்றம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களையும் படிப்படியாக இராணுவம் முற்றுகையிட்டு, தன்வசம் கொண்டு வந்தது.

அதிபர் மாளிகையை எப்போது வேண்டுமானாலும், இராணுவம் முற்றுகையிடலாம் என்ற நிலை நீடித்து வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபர் முகபே மற்றும் அவரது குடும்பத்தினர் இராணுவத்தின் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Nov. 4, 2017: Zimbabwe's President Robert Mugabe delivers a speech during a rally for the ruling ZANU-PF party in Bulawayo.

இதற்கிடையே, ‘ரத்தம் சிந்தாமல் நடைபெற்ற மாற்றம்’ என ஆளும்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here