கலிபோர்னியாவில் கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் பலி!

0
392
California Robbers Shot Killed Indian Sikh Student

(California Robbers Shot Killed Indian Sikh Student)

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த தரம்பீரித் சிங் ஜாசர் என்ற மாணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு படிப்பதற்காகச் சென்றிருந்தார். அவர் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பிரெஸ்னோ நகரில் வசித்து வந்துள்ளார்.

படிக்கும் போதே பகுதி நேரமாக அப்பகுதியிலுள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார்.

California Robbers Shot Killed Indian Sikh Student

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஜாசர் கடையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தபோது கையில் துப்பாக்கியுடன் அங்கு வந்த நான்கு கொள்ளையர்கள் கடையில் இருந்த பொருட்களை சூறையாடத்தொடங்கினர்.

அவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜாசர் கடையிலுள்ள ஒரு மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டார். கொள்ளையர்கள் எல்லா பொருட்களையும், பணத்தையும் கொள்ளை அடித்துக்கொண்டு வெளியில் செல்லும் போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த ஜாசரைக் கண்டு துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதில் படுகாயமடைந்த ஜாசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த நேரத்தில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், ஜாசர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீஸ் சிசிடிவி பதிவை சோதனை செய்து கொள்ளையர்களில் ஒருவரை அடையாளம் கண்டு கொண்டது.

இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான அத்வல் என்பவரே ஜாசரை துப்பாக்கியால் சுட்டுள்ள கொலையாளி.

அவரைக் கைது செய்துள்ள பொலிஸ்,அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் கொலையில் சம்பந்தப்பட்ட 3 பேரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மாணவர் பலியான சம்பவம் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here