குழந்தையுடன் காதலனை கைப்பிடித்த செரீனா!

0
1275
Serena Williams Marry Reddit co-founder Alexis Ohanian

(Serena Williams Marry Reddit co-founder Alexis Ohanian)

டென்னிஸ் உலகில் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். தற்போது 36 வயதாகும் செரீனா, 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இவர் ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியனை காதலித்து வருகின்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற செரீனா கோப்பையை வென்று சாதனைப் படைத்திருந்தார். இந்த தொடரில் விளையாடும்போது தான் கர்ப்பிணியாக இருந்ததாக செரீனா கூறியிருந்தார். பின்னர் அது உறுதி செய்யப்பட்டது.

Serena Williams Marry Reddit co-founder Alexis Ohanian

கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் அதன்பின் செரீனா டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. செரீனாவிற்கு கடந்த புரட்டாதி மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து ஒன்றரை மாதம் கழிந்த நிலையில், செரீனாவிற்கும் அவரது காதலரான அலெக்சிஸ் ஓகானியனுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு மார்களியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

அடுத்த ஆண்டு தை மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய
ஓபன் தொடரில் கலந்து கொள்வேன் என்று செரீனா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here