ஆர்ஜென்டினாவில் 44 படையினருடன் மாயமாகிய நீர்மூழ்கி கப்பல்!

0
226
Argentina Missing Submarine 44 Navy Officers Disappear

(Argentina Missing Submarine 44 Navy Officers Disappear)

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று 44 வீரர்களுடன் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளிலொன்று அர்ஜென்டினா. அந்நாட்டு கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி ரோந்து கப்பலான சான்ஜயர்னஸ், இரு நாட்களுக்கு முன்னால் மார்டெல் பிளாடா கடற்படைத் தளப் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.

Argentina Missing Submarine 44 Navy Officers Disappear

அந்த கப்பலில் பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 44 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக அந்தக் கப்பலைத் தேடும் பணியில் அர்ஜென்டினா கடற்படை முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிலவிய மோசமான தட்ப வெப்பநிலையின் காரணமாக கப்பல் மாயமாகி இருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.

மூன்று நாட்களாக நீடிக்கும் தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ,அக்கப்பலில் உள்ள 44 பேர்களின் கதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here