இந்த ஆண்டில் மட்டும் காஷ்மீரில் 190 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

0
209
Indian Army Says This Year 190 Kashmir Terrorists Shot Killed

(Indian Army Says This Year 190 Kashmir Terrorists Shot Killed)

ஜம்மு-காஷ்மீரின் அமைதியைச் சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகின்றது.

தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களை ஊடுருவச் செய்து வரும் பாகிஸ்தானின் இம் முயற்சிகளை இந்திய இராணுவமும் தொடர்ந்து முறியடித்து வருகின்றது.

பாகிஸ்தானில் தீவிரவாதத்திற்காக கிடைக்கும் தீவிரவாத நிதி தற்போது முடங்கியுள்ளது. இந்த பயங்கரவாத நிதியகம் தொடர்பாக விசாரித்து வருகின்ற தேசிய புலனாய்வு பிரிவானது, பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகளையும் கைது செய்து விசாரித்து வருகின்றது.

Image result for Indian Army Says This Year 190 Kashmir Terrorists Shot Killed

மேலும் இராணுவம், மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் மாகாண போலீஸ் என்பனவும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியைத் தொடர்ந்து வருகின்றன.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இராணு படைப்பிரிவுத் தலைமை அதிகாரி ஜே.எஸ்.சந்து “காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” எனக்கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்

“இளைஞர்கள் தீவிரவாதப் பாதையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தீவிரவாதிகள் அழிக்கப்பட்டமை காஷ்மீர் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் காஷ்மீரில் எண்ணற்ற தீவிரவாத வேட்டைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம். கடந்த தை மாதத்திலிருந்து இதுவரை 190 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 80 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள்; மற்றவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். 190 பேரில் 66 பேர், ஊடுருவல் முயற்சியின்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே கொல்லப்பட்டவர்கள். மீதி 124 பேர், உட்புற பகுதியில் கொல்லப்பட்டவர்கள். இவர்கள் கொல்லப்பட்டமை நிலைமையைப் பெருமளவு மாற்றியுள்ளது. காஷ்மீர் பகுதியில் இன்னும் 200 தீவிரவாதிகள் செயற்பட்டு வருகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here