மனுஷி சில்லாரை உலக அழகியாக்கியது எது தெரியுமா?

0
1539
Manushi Chhillar Said Clever Answer Leads Miss World Award

(Manushi Chhillar Said Clever Answer Leads Miss World Award)

சீனாவின் சான்யா நகரில் 2017-ஆம் ஆண்டிற்கான 67-வது உலக அழகி போட்டி நடைபெற்றது.

இதில் உலக அழகியாக இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.

மனுஷி சில்லார் ஏற்கனவே மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து ஏற்கனவே ரெய்டா பரியா, ஐஸ்வர்யா ராய், யுக்தா முகி, பிரியங்க சோப்ரா என்று இந்தியாவில் இதுவரை ஐந்து பெண்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.

Manushi Chhillar Said Clever Answer Leads Miss World Award

மனுஷி சில்லாருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

ஆனால் மனுஷி சில்லாருக்கு உலக அழகி பட்டம் கிடைத்ததுக்கு அவர் கூறிய ஒரே ஒரு பதில் தான் காரணமாம். அது என்னவென்று தெரியுமா?

உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி எது? என்பதுதான் கேள்வி.

அதற்கு மனுஷி கூறிய பதில் , ‘தாய்மை தான் உலகிலேயே அதிக மதிப்புள்ள பணி. இந்த பணிக்கு சம்பளமாக பணம் தரப்படாவிட்டாலும், அன்பும், பாசமும் மரியாதையும் அதிகமாக கிடைக்கும். எனவே தாய்மையே உலகிலேயே அதிக சம்பளம் வழங்கப்படும் பணி என்று கூறினார்.

Related image

இந்த பதில் நடுவர்கள் அனைவரையும் கவர்ந்ததால் அவருக்கு உலக அழகி பட்டம் கிடைத்துள்ளது.

 

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here