பனாமா பேப்பர்ஸ் விவகாரம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை!

0
203
Panama Papers Matter Pakistan Nawaz Sharif Travel Restrictions

(Panama Papers Matter Pakistan Nawaz Sharif Travel Restrictions)

பனாமா நாட்டில் உள்ள புகழ் பெற்ற ‘மொஸாக் பொன்சேகா’ சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளமை தொடர்பான ஆவணங்கள் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது அனைவரும் அறிந்ததே.

பாகிஸ்தானில் 1990 களில் நவாஸ் ஷெரீப் இரு முறை பிரதமராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்து, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக இப் ‘பனாமா ஆவணங்கள்’ கூறியிருந்தன.

‘பனாமா கேட்’ ஊழல் எனவும் அழைக்கப்படும் இந்த ஊழலில், நவாஸ் ஷெரீப்பின் பதவியைப் பறிக்குமாறு ‘பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப்’ கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி)யின் தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை அதிரடியாகத் தகுதி நீக்கம் செய்து கடந்த ஆடி மாதம் 28ம் திகதி உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார்.

Panama Papers Matter Pakistan Nawaz Sharif Travel Restrictions

மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் ஓய்வு பெற்ற கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பானது ஊழல் வழக்குகள் தொடுத்ததுடன், அந்த வழக்குகளின் விசாரணையை பொறுப்புடைமை நீதிமன்றம் 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவில் கூறியிருந்தது.

இதைத் தொடர்ந்து ஷெரீப் குடும்பம் மீது 3 ஊழல் வழக்குகள், இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன; அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி நவாஸ் ஷெரீப், உச்ச நீதிமன்றம் வரை சென்றும் பலன் இல்லை.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப், மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் ஓய்வு பெற்ற கேப்டன் முகமது சப்தார் ஆகியோரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில், தேசிய பொறுப்புடைமை அமைப்பின் லாகூர் பிரிவு ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இதைப்பற்றிக் கூறுகையில், “நவாஸ் ஷெரீப் குடும்பத்தினரின் பெயர், நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டால், பயண கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நீதிமன்ற விசாரணையைத் தவிர்க்கிற வகையில், நீதிமன்றுக்குச் சமுகமளிக்காமல் இருந்து வந்த நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.

பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளோர் பட்டியலில் நவாஸ் ஷெரீப்பையும், அவரது குடும்பத்தினரையும் சேர்ப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here