சொந்த இடத்தில் புதைக்கப்படவுள்ள அவுஸ்திரேலியாவின் மங்கோ மேன்!

0
512
Mungo Man 42000 Years Oldest Australian Human Grave

(Mungo Man 42000 Years Oldest Australian Human Grave)

அவுஸ்திரேலியாவின் மிகவும் பழமையான, பூர்வக்குடியை சேர்ந்த, மனித எலும்புக்கூடு பத்தாண்டுகளுக்கு மேலாக கேன்பெராவின் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

மங்கோ மேன் என்று அழைக்கப்படும் இந்த எலும்புக்கூடு, மேற்கு சிட்னியிலிருந்து 750 கி.மீட்டர் தொலைவில் உள்ள, மங்கோ தேசிய பூங்காவின் ஏரிக்கரையில், ஜிம் பௌலர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதே போன்று “மங்கோ லேடி” என்று குறிப்பிடப்படும் பெண்ணின் எலும்புக்கூட்டையும், அவர் 1967ஆம் ஆண்டு கண்டுபிடித்திருக்கிறார்.

ஆய்வுகளுக்காக, மங்கோ மேனின் எலும்புக்கூடு கேன்பெராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அது 42,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு என்றும், அவுஸ்திரேலியாவில் உள்ள மனித எலும்புக்கூடுகளிலேயே பழமையானது இதுதான் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

மங்கோ மேன், ஒரு வேடன் என்றும், மூட்டு வீக்கம் காரணமாக, ஏறத்தாழ 50 வயதில் அவர் இறந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அந்த பகுதியை சேர்ந்த பழங்குடிகள், அவரின் எலும்புக்கூடு அங்கு புதைக்கப்பட வேண்டும் என பல காலங்களுக்கு முன்பு கூறியதோடு, அவரின் எலும்புகளை அங்கிருந்து நீக்கியது பெரிய மன வருத்தத்தை உருவாக்குவதாக தெரிவித்துள்ளனர்.

Mungo Man 42000 Years Oldest Australian Human Grave

இகனையடுத்து இந்த எலும்புக்கூடு, கடந்த வெள்ளிக்கிழமை நியூ சவுத் வேல்ஸில் உள்ள அவரின் பாரம்பரிய இடத்திற்கு மரியாதையோடு கொண்டுவரப்பட்டது.

மங்கோ தேசிய பூங்காவில் ஒரு ரகசிய இடத்தில் அவர் புதைக்கப்படவுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here