செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

0
14027
Sex Torture Tamil Nadu Dharmapuri Wife Murdered Husband

(Sex Torture Tamil Nadu Dharmapuri Wife Murdered Husband)

தமிழ்நாடு தர்மபுரி, காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசு (வயது 42). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

இவருக்கும், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெரிய சோரகை பகுதியை சேர்ந்த லெட்சுமி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிர்த்தி(17) என்ற மகளும், கரண்(15) என்ற மகனும் உள்ளனர். கவியரசு குடும்பத்துடன் மனைவி வீட்டிலேயே வசித்து வந்தார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக லெட்சுமி கணவர் கவியரசை விட்டு பிரிந்து தனது மகளை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார். கவியரசு தனது மகனுடன் காமாட்சி அம்மன் கோவில் தெருவிலேயே வசித்து வந்தார்.

இதன் பின்னர் , கவியரசுவின் பைனான்ஸ் நிறுவனத்தில் வட்டிக்கு பணம் எடுத்து கட்ட இயலாத மல்லிகா என்ற பெண்ணின் 23 வயது மகள் நிர்மலாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியதால் , ஏழ்மை நிலையில் இருந்த மல்லிகா தனது மகளை இரண்டாம் தாரமாக கவியரசுவுக்கு கட்டிவைத்தார்.

Sex Torture Tamil Nadu Dharmapuri Wife Murdered Husband
கொலை செய்யப்பட்ட கவியரசு மற்றும் கொலை செய்த நிர்மலா

திருமணத்தின் பின் 2-வது மனைவி நிர்மலாவுடன் குடும்பம் நடத்தி வந்த கவியரசு திடீரென மாயமானார்.

இது சம்பந்தமாக விசாரணை நடத்திய போலீசார் , நிர்மலா தனது கள்ளக்காதலன் எம்.இ. பட்டதாரியான அபினேஷ் மற்றும் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்து உடலை குண்டல்பட்டி- மல்லிகுட்டை சாலையில் நல்லாண்டி அள்ளியில் உள்ள காலியிடத்தில் புதைத்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பில் நிர்மலா கூறியிருப்பதாவது.

எனது சம்மத்தை மீறி , வட்டி பணத்தை செலுத்த இயலாத பெற்றோர் வலுக்கட்டாயமாக கவியரசுவுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

திருமணம் ஆன பிறகு கவியரசு அதீத சக்தி கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டு என்னிடம் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார். மேலும் இது போல் அடிக்கடி செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார். நான் பல முறை மறுத்தபோதும் என்னை விடவில்லை. ஒரு கட்டத்தில் அவரது செக்ஸ் தொல்லை அதிகரிக்கவே நான் விரக்தி அடைந்தேன்.

இதனால் எனது கணவனை கொலை செய்ய காதலனுடன் நான் திட்டம் தீட்டினேன் என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து கள்ளக்காதலன் அபினேஷ் மற்றும் நிர்மலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடைய அடியாட்களையும், கூலிப்படையினரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here