இந்தியர்களின் கருப்பு பண தகவல் பரிமாற்றத்துக்கு சுவிஸ் பாராளுமன்றக்குழு ஒப்புதல்!

0
303
Switzerland Parliament Approved Indian Black Money Information Sharing

(Switzerland Parliament Approved Indian Black Money Information Sharing)

இந்தியாவை சேர்ந்த ஏராளமான செல்வந்தர்கள் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் குவித்து உள்ளனர்.

இந்த கருப்பு பணத்தை மீட்கவும், அது பற்றிய தகல்களை சேகரிக்கவும் அந்த நாட்டுடன் இந்திய மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, அங்குள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கும் பணம் பற்றிய தகவல்களை தானாக வழங்க வகை செய்யும் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

Switzerland Parliament Approved Indian Black Money Information Sharing

இந்தியா மற்றும் 40 நாடுகளுடன் கருப்பு பணம் பற்றிய தகவல்களை பகிர வகை செய்யும் இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் பாராளுமன்ற கீழ்சபை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.

எனினும் இந்த ஒப்பந்தத்தில் தனிநபர் உரிமைகளுக்கான வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

இந்த ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக வருகிற 27-ந் திகதி நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.

இரு நாடுகளுக்கு இடையே அடுத்த ஆண்டு அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய தகவல்கள் 2019-ம் ஆண்டு மூலம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here