நைஜீரியா மசூதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்- 50 பேர் பலி!

0
167
Nigeria Deadly Suicide Bombing Pounds Mosque killed 50 People

(Nigeria Deadly Suicide Bombing Pounds Mosque killed 50 People)

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதிக்குள் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு கடந்த எட்டு வருடங்களாக போகொஹராம் தீவிரவாதிகள் தனி அலகு கோரி போரிட்டு வருகின்றனர்.

அண்மைய காலமாக அங்கு மனித வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகளை தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் , நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் இன்று புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதி தனது உடலில் கட்டி இருந்த வெடி குண்டுகளை வெடிக்க வைத்தான்.

Nigeria Deadly Suicide Bombing Pounds Mosque killed 50 People

இந்த கொடூர தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here