வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!

0
163
America Trump Administration Announce New Restriction North Korea

(America Trump Administration Announce New Restriction North Korea)

உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா. சபையின் பொருளாதார தடைகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் வடகொரியா தொடர்ந்தும் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்த பொருளாதாரத் தடைகள் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் விதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா மீது வடகொரியாவுக்கு கடும் எரிச்சலும் ஆத்திரமும் ஏற்பட்டுள்ளது.

இப் புதிய பொருளாதார தடைக்கு அமெரிக்கா உரிய விலையைக் கொடுக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்துள்ளது. போர் தொடுத்தால் அமெரிக்காவை தாமும் ஏவுகணைகளால் தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அமெரிக்காவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா தீவிரவாதத்தை ஆதரித்து வருவதாக கூறினார்.

America Trump Administration Announce New Restriction North Korea

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து வரும் நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரான், சூடான், சிரியா போன்ற நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் இணைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் வடகொரியா மீதான கெடுபிடிகள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் வடகொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. வடகொரியாவுடன் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள ஒரு தொழிலதிபர், 13 நிறுவனங்கள் மற்றும் 20 கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைத் தடுத்து, அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

“வடகொரியா மற்றும் அந்த நாட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் அபராதம் மற்றும் தடை விதிக்கப்படும்” என்று நிதித்துறை அமைச்சர் ஸ்டீவன் முனுசின் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here