தீவிரவாதிகளால் பாகிஸ்தான் இராணுவ மேஜர் சுட்டுக்கொலை!

0
332
Terrorists Attack Killed Pakistan Army Major Rank Officer

(Terrorists Attack Killed Pakistan Army Major Rank Officer)

பாகிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள தேரா மாவட்டம் வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பழங்குடி இன மக்களுக்கு பாதையாக இருந்து வருகிறது. இந்த மாவட்டம் உள்ளூர் மற்றும் அயல்நாட்டு தீவிரவாதிகளின் உறைவிடமாக இருந்து வருகின்றது.

கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.

அப்போது தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் இராணுவ மேயர் இஷாக் மரணமடைந்தார். 28 வயதான இஷாக் பாகிஸ்தானுக்கு சொந்தமான பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்.

Terrorists Attack Killed Pakistan Army Major Rank Officer

இவருக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவருடைய உடலுக்கு தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இறுதி மரியாதை செய்யப்பட்டது. இதில் இராணுவ ஜெனரல் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் சண்டையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இஷாக் உட்பட 4 இராணுவ மேயர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here