துபாய் மன்னர் ஷேக் மொஹமதுவுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் விருது!

0
232
Dubai King Sheikh Mohammed Receives Humanitarian Award

(Dubai King Sheikh Mohammed Receives Humanitarian Award)

துபாய் மன்னர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் மொஹமது பின் ரஷித் மக்தூமுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி குறைந்த நாடுகளில் துபாய் ஷேக் மொஹமது பின் மக்தூம் முன்னெடுத்த மனிதாபிமான சேவைகளுக்காக அவரை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Dubai King Sheikh Mohammed Receives Humanitarian Award

நேற்று முன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழா அமிரக அரண்மனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

இதில் அபுதாபி பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ராணுவ துணை தளபதியுமான ஷேக் மொஹமத் பின் ஜாயித் அல் நஹ்யான் இந்த ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் விருதை துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் மக்தூமுக்கு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பேசிய மன்னர் ஷேக் மொஹமது, இந்த விருதை பெறுவதில் பெருமையடைவதாக கூறினார். இதன் மூலம் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களால் நிறுவப்பட்ட மதிப்புகள் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here