இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு-மக்கள் வெளியேற்றம்!

0
183
Indonesia Volcano Eruption Closes Bali Main Airport

(Indonesia Volcano Eruption Closes Bali Main Airport)

இந்தோனேசியா தீவுக் கூட்டத்தில் உள்ள பாலித் தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 22-ம் திகதி வெடிக்க தொடங்கியது.

அதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த எரிமலை வெடித்து சிதறும் நிலை உள்ளது.

எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர்.

Image result for Indonesia Volcano Eruption Closes Bali Main Airport

இந்நிலையில், இந்த எரிமலையின் பாதிப்பு குறித்து இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எரிமலை வெடித்துச் சிதறும்போது அதனை சுற்றியுள்ள பிரதேசத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், 10 கிமீ சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

எரிமலை வெடிக்கும் சத்தம், மலைச்சிகரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவு வரை கேட்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here