ரோஹிங்கியா மக்கள் மீள் குடியேற்றம் : போப் பிரான்சிஸ் ஆங் சான் சூகியுடன் ஆலோசனை!

0
197
Pope Francis Involves Myanmar Rohingya Refugees Re Settlement

(Pope Francis Involves Myanmar Rohingya Refugees Re Settlement)

கடந்த ஆவணி மாதம் மியான்மரில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளிலிருந்து சுமார் 6 லட்சம் வரையான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது இராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் உள்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான போப் பிரான்சிஸ் மூன்று நாட்கள் கொண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று மியான்மருக்கு வருகை தந்திருந்தார். அவரை வரவேற்குமுகமாக ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்தில்கூடி அவருக்குச் சிறப்பான வரவேற்பை அளித்திருந்தனர்.

போப் பிரான்சிஸ் ரோஹிங்கியா இன மக்களை மீள் குடியேற்றம் செய்வது தொடர்பில் மியான்மார் அரசின் தலைமை ஆலோசகரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி மற்றும் இராணுவத் தளபதி மின் ஆங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவிருக்கின்றார்.

மியான்மர் சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னர் போப் பிரான்ஸிஸ் வங்காளதேசம் செல்ல இருக்கின்றார்.

இதேவேளை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையில் மியான்மர் அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சந்தித்து, ரக்கினே மாநிலத்திலுள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

Pope Francis Involves Myanmar Rohingya Refugees Re Settlement

 

 

 

 

 

 

 

 

 

அத்துடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, இராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் சந்தித்து பேசிய பின்னர், ஆங் சான் சூகியுடன் கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்திருந்தார்.

இச்சந்திப்பில் ‘மியான்மரை விட்டு வெளியேறிய அகதிகள் கண்ணியமான முறையில் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆங் சான் சூகி மேற்கொள்ள வேண்டும்’ என டில்லர்சன் வலியுறுத்தியிருந்தார். அத்துடன் நாடு திரும்பும் அகதிகளின் மீள்குடியமர்த்தல் தொடர்பாக, தேவையான வரையறைகளை வகுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளை நாடு திருப்புவது தொடர்பான ஒப்பந்தம் மியான்மர் அரசுடன் கையெழுத்தாகியுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூடவே இரண்டு மாதங்களில் அகதிகள் மியான்மருக்கு திரும்பும் வகையில் ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here