தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்க வேண்டும்:ஹபீஸ் சயீத் கோரிக்கை!

0
187
Mumbai Attack Mastermind Hafiz Saeed Petitions UN

(Mumbai Attack Mastermind Hafiz Saeed Petitions UN)

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். இவன் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர். தற்போது ஜமாத்-இ-உத்தவா என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

இவன் தலைக்கு அமெரிக்கா ரூ. 6 கோடியே 50 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளது. தேடப்படும் குற்றவாளியாகவும் இவன் அறிவிக்கப்பட்டு இருக்கிறான்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின் தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் தனது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என எச்சரித்தார்.

அதை தொடர்ந்து ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு கைது செய்து வீட்டு காவலில் வைத்தது.

Mumbai Attack Mastermind Hafiz Saeed Petitions UN

 

 

 

 

 

 

 

 

 

இதற்கிடையே போதுமான ஆதாரம் இல்லை என கூறி அவரை லாகூர் கோர்ட்டு சமீபத்தில் விடுதலை செய்தது.

அதை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தீவிரவாதி ஹபீஸ் சயீத் ஒரு மனு அளித்துள்ளார்.

அதில், “தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என கூறி லாகூர் கோர்ட்டு என்னை விடுதலை செய்துள்ளது.

எனவே, தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here