“வடகொரியாவின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம்” -அமெரிக்க அதிபர் டிரம்ப்

0
199
Trump Says America Observing North Korea Activities

(Trump Says America Observing North Korea Activities)

உலக நாடுகளின் கண்டனங்களையும் மீறி வடகொரியா பல தடவைகள் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகின்றது.

கடந்த சில மாதங்களில் மட்டும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பல ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து வடகொரியா மீது ஐ.நா. சபை புதிய பொருளாதாரத் தடையை விதித்திருந்தது. “எங்கள் மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதாரத் தடைக்கு அமெரிக்கா உரிய விலையைக் கொடுக்க நேரிடும்” என அதற்குப் பதில் எச்சரிக்கையை வடகொரியா விடுத்திருந்தது.

நேற்று மீண்டும் வடகொரியா ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டுள்ளது. ‘தனது கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது’ என ஜப்பான் நாட்டு அதிபர் ஷின்சோ அபே தெரிவித்திருக்கின்றார்.

வடகொரியா ஏவுகணைச் சோதனையை நடத்தியது உண்மைதான் என வாஷிங்டனிலுள்ள பென்டகனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், “ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில், “வடகொரியா நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இந்த நிலைமையை நாங்கள் எதிர்கொள்வோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாகவே வடகொரியாவை நாங்கள் பார்த்து வருகிறோம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை” என கூறியுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here