மியான்மார் புத்த மத தலைவர்களுக்கு போப் பிரான்சிஸ் அறிவுரை!

0
131
Vatican defends Pope Francis Advises Myanmar Buddhist Leaders

(Vatican defends Pope Francis Advises Myanmar Buddhist Leaders)

மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில்,வங்காளதேச நாட்டில் இருந்து குடிபெயர்ந்து பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாகக் காணப்படும் சிறுபான்மை இனமான ரோஹிங்கியா முஸ்லிம்களில் சிலர், கடந்த 2012ம் ஆண்டிலிருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மியான்மரிலுள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆவணி மாதம் 25ம் திகதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான இராணுவ வேட்டை தீவிரம் அடைந்துள்ளது.

மியான்மரில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து தப்பிச் சென்று, மீண்டும் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் தப்பிச்செல்லும் போது பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

இதேவேளை ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலகாலமாக மியான்மரின் ஆட்சியை கைப்பற்றி வைத்திருந்த இராணுவ ஆட்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்படிய மறுத்த இஸ்லாம் மதத்தினரான ரோஹிங்கியா மக்கள்மீது அடக்குமுறையை இராணுவம் பயன்படுத்தி வருவதாக சில நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களை திரும்பப்பெற மியான்மர் அரசு சம்மதம் தெரிவித்துள்ளதுடன், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் வங்காளதேச நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்மூத் அலி கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

தற்போது உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக 4 நாள் பயணமாக மியான்மர் நாட்டுக்கு வந்துள்ளார். மியான்மர் அரசின் ஆலோசகர் ஆங் சான் சூகியை நேற்று அவர் சந்தித்தும் பேசியுள்ளார்.

Vatican defends Pope Francis Advises Myanmar Buddhist Leaders

 

 

 

 

 

 

 

 

 

ரோஹிங்கியா இனத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள மா பா தா என்ற புத்த அமைப்பின் தூண்டுதலின் பேரிலேயே மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் அங்கு கலவரத்துக்கு காரணமான இருதரப்பினருடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள போப் பிரான்சிஸ் யாங்கூன் நகரிலுள்ள பிரபல புத்த தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான புத்த மத தலைவர்கள் மற்றும் தலைமை பிட்சுக்களின் கூட்டமைப்பான ’சங்கா’ அமைப்பினரிடையே உரையாற்றியுள்ளார்.

“ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பது நம்முடைய நோக்கமாக உள்ளதால் கருத்து முரண்பாடு,பாரபட்சம், வெறுப்புணர்ச்சி, சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றை எதிர்த்து வெல்ல நீங்கள் உதவ வேண்டும்” என புத்த மத தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்!

வீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்!

ஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்!

எசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here