அமெரிக்க ஊடகங்களுக்கு ரஷ்ய பாராளுமன்றில் நுழைய தடை!

0
149
Russia Announce banned American Pressed Inside Parliament

(Russia Announce banned American Pressed Inside Parliament)

அமெரிக்காவில் ஆர்.டி எனும் சேட்டிலைட் தொலைக்காட்சி ரஷ்ய முதலீட்டோடு இயங்கி வருகிறது.

அதை வெளிநாட்டு முகவர் எனும் பெயரில் பதிவு செய்யுமாறு அமெரிக்க நீதித்துறை உத்தரவிட்டது. இது பாரபட்சமான நடவடிக்கை என அந்த தொலைக்காட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்ய ஊடகத்தின் மீது சட்டரீதியான தாக்குதல் நடத்துவதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க ஊடகங்களை வெளிநாட்டு முகவர்கள் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

மேலும், ரஷ்ய பாராளுமன்றத்தில் அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்கள் நுழைவதற்கு தடை விதிப்பது குறித்து வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அமெரிக்க பத்திரிக்கை நிறுவனங்களின் தடைக்கு ஆதரவு அளித்து வாக்களித்தனர். இதையடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ரஷ்யாவில் 20 க்கும் அதிகமான அமெரிக்க ஊடகங்கள் செயல்படுகின்றன.

அவை வெளிநாட்டு முகவர்கள் என்ற பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனவும், அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here