கட்டலோனியா தலைவருக்கு எதிரான ஐரோப்பிய பிடி ஆணை ரத்து!

0
193
Spanish Supreme Court Frees Catalan Leader Carles Puigdemont

(Spanish Supreme Court Frees Catalan Leader Carles Puigdemont)

பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டலோனியா அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்ட ஐரோப்பிய பிடி ஆணையை ஒரு ஸ்பெயின் நீதிபதி திரும்பப்பெற்றுள்ளார்.

ஒரு தலைபட்சமாக கட்டலோனியா சுதந்திரத்தை அறிவித்த பிறகு இவர்கள் பெல்ஜியம் நாட்டிற்குத் தப்பிச் சென்றனர்.

ஐரோப்பியப் பிடியாணை ரத்து செய்யப்பட்டாலும், தேசவிரோதம் மற்றும் கிளர்ச்சிக்கான குற்றச்சாட்டுகளை அவர்கள் இன்னும் எதிர்கொண்டுள்ளதாக நீதிபதி கூறினார்.

ஸ்பெயினில் மிகக் கடுமையான குற்றங்களில் ஒன்றாகக் கிளர்ச்சி கருதப்படுகிறது. இதற்கு 30 வருடங்கள் வரை சிறை தண்டனைக் கிடைக்கலாம்.

டிசம்பர் 21-ம் தேதி கட்டலோனியா பிராந்தியத்தில் புதிய தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நாடு திரும்புவதற்கான விருப்பத்தை கட்டலோனியா தலைவர்கள் கூறியதை மேற்கோள்காட்டிய ஸ்பெயின் உச்சநீதிமன்ற நீதிபதி பப்லோ லலாரோ, பிடி ஆணையைத் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

Spanish Supreme Court Frees Catalan Leader Carles Puigdemont

 

 

 

 

 

 

 

 

 

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்ற ஆறு கட்டலோனியா அமைச்சர்களும் திங்கட்கிழமையன்று ஜாமினில் விடுதலையாகினர்.

ஆனால், கட்டலோனியாவின் முன்னாள் துணை அதிபர் ஒரியல் ஜுனகார்ஸ் உள்ளிட்ட இருவர் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டலோனியாவில் புதிய தேர்தலுக்கான பிரசாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here