காங்கோ ஐ.நா. அமைதிப்படை முகாம் மீது தாக்குதல் – 14 பேர் பலி!

0
274
Congo Islamist Attack Kills Fifteen UN peacekeepers

(Congo Islamist Attack Kills Fifteen UN peacekeepers)

ஆபிரிக்க நாடான காங்கோவில் கடந்த 1996ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டுச் சண்டைகளில் பல லட்சம் மக்கள் பலியானதையடுத்து அங்கு ஐ.நா. அமைதிப்படை அனுப்பப்பட்டது.

தற்போது ஐ.நா. அமைதிப்படையின் 18 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Congo Islamist Attack Kills Fifteen UN peacekeepers

 

 

 

 

 

 

 

 

 

இப்போதும் பல ஆயுதக்குழுக்கள் செயல்படுகின்றன. இவர்கள், ஐ.நா. அமைதிப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெனி நகரில் உள்ள ஒரு ஐ.நா. அமைதிப்படையினரின் முகாம் மீது நேற்று சில போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு இருந்த அமைதிப்படையினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படையை சேர்ந்த 14 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சுமார் 53 பேர் படுகாயமடைந்தனர். இன்னும் சிலரை காணவில்லை.

அவர்களை போராட்டக்காரர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பலியானவர்களில் ஐந்து பேர் டாஸ்மானியாவை சேர்ந்தவர்கள் என ஐ.நா. அமைதிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டெரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here