ஏமன் டி.வி. நிலையம் மீது சவுதி கூட்டுப்படை தாக்குதல் – 4 பேர் பலி!

0
174
Saudi Arabia Attack Yemen Television Center Killed 4 People

(Saudi Arabia Attack Yemen Television Center Killed 4 People)

ஏமனில் உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கடந்த வாரம் சலே கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஏமனில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள சனாவில், டி.வி. நிலையம் ஒன்றின்மீது நேற்று முன்தினம் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.

இதுபற்றி கிளர்ச்சியாளர்களின் அல் மசிரா டி.வி. கூறுகையில், “சவுதி, அமெரிக்க பகைவர்கள் ஏமன் செயற்கைக்கோள் டி.வி. நிலைய கட்டிடம் மீது குண்டுவீச்சு நடத்தினர். இதில் 4 காவலர்கள் பலியானார்கள்” என தெரிவித்தது.

Saudi Arabia Attack Yemen Television Center Killed 4 People

 

 

 

 

 

 

 

 

 

இந்த தாக்குதலில் காயம் அடைந்த தலைமை காவலர் ஒருவர் நிருபர்களிடம் பேசுகையில், “இது ராணுவ நிலை அல்ல. இங்கு ஆயுதங்களும் கிடையாது. இது காவலர்களாகிய நாங்கள் தங்கி வந்த கட்டிடம் ஆகும். இதன்மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்த தாக்குதல் பற்றி சவுதி கூட்டுப்படைகள் தரப்பில் கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here