ஈரானை அடுத்தடுத்து உலுக்கும் நில அதிர்வுகள்!

0
164
Iran Earthquake Latest Magnitude 6.1 Quake Strikes Kerman Province

(Iran Earthquake Latest Magnitude 6.1 Quake Strikes Kerman Province)

ஈரான் நாட்டில் இன்று அதிகாலை 6.0 ரிகடர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி, தொடர்ந்து நில அதிர்வுகள் உணரப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 என்ற அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சுமார் 57 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், 18 பேர் காயம் அடைந்துள்ளனர். அந்த மாகாணத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மேற்கு பகுதியில் 5.4 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நில அதிர்வுகள் நிகழ்வதால் அங்குள்ள பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தொடர்ந்து கடந்த சில தினங்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 530 பேருக்கு மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here