சவுதி அரேபியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி!

0
204
Saudi Arabia Govt Allows Woman Ride Motor Bikes

(Saudi Arabia Govt Allows Woman Ride Motor Bikes)

இஸ்லாமிய நாடான சவுதிஅரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்ணுரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதிஅரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து வருகிற 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து கடந்த செப்டம்பர் மாதம் மன்னர் முகம்மது பின் சல்மான் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், காரை தொடர்ந்து மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Saudi Arabia Govt Allows Woman Ride Motor Bikes

 

 

 

 

 

 

 

 

 

இதற்கான அறிவிப்பை சவுதி அரேபியா நாட்டின் போக்குவரத்து துறை இயக்குனர் ஜெனரல் நேற்று வெளியிட்டார்.

ஓட்டுனர் உரிமம் இருபாலருக்கு பொருத்தம் என்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள், லாரிகள் ஓட்டவும் பெண்களுக்கு உரிமம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் ஓட்டும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் வேறு வகையில் இருக்கும். இதேபோல், போக்குவரத்து விதிகளை மீறும் பெண்கள் மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் பெண் ஓட்டுநர்களை தண்டிப்பதற்கும், அபராதம் விதிப்பதற்கும் பெண்களால் நிர்வகிக்கப்படும் தனி அமைப்பு உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here