அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் மின் தடை! 1000 விமானங்கள் ரத்து!

0
148
Atlanta Airport Power Failure Cancel 1000 Flight Services

(Atlanta Airport Power Failure Cancel 1000 Flight Services )

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

ஒரு நாளைக்கு 2500 விமானங்கள் 2.5 லட்சம் பயணிகள் வரை கையாளும் இந்த விமான நிலையம் உலகின் மிக பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

இந்நிலையில், நேற்று விமான நிலையத்திற்கு அளிக்கப்படும் மின்சாரத்தில் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையம் முழுவதும் கணினி சேவைகள், தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முடங்கின. இதனால், 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Atlanta Airport Power Failure Cancel 1000 Flight Services

விமானங்கள் ரத்தானதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். பூமியில் புதைக்கப்பட்டுள்ள மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிந்தது மின் தடைக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையை அடுத்து, நேற்று நள்ளிரவு மின் சேவை சீரானது. இருப்பினும், இன்று புறப்பட இருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் சமூக வலைதளங்களில் விமான நிலைய நிர்வாகம் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here