தென்னாபிரிக்கா ஆளும் கட்சித் தலைவராக துணை அதிபர் ராமபோசா தேர்வு!

0
118
South Africa Ruling ANC Party Select Cyril Ramaphosa New Leader

(South Africa Ruling ANC Party Select Cyril Ramaphosa New Leader)

தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு கடுமையான போட்டி நிலவி வந்தது.

இப்போட்டி கடுமையான அரசியல் மோதலுக்கு வழிவகுத்ததுடன், தேர்தலுக்கு முன்பே கட்சியை பிளவுபடுத்தும் என்ற அச்சங்களையும் எழுப்பியது.

இந்நிலையில் கட்சியின் புதிய தலைவராக சிரில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது கட்சியின் தலைவராக அந்நாட்டின் அதிபரான ஜேக்கப் ஜுமா உள்ளார்.

South Africa Ruling ANC Party Select Cyril Ramaphosa New Leader

தென்னாபிரிக்காவின் துணை அதிபராக உள்ள ராமபோசா, அக்கட்சியின் தேசிய மாநாட்டில் பரபரப்பாக நடந்த வாக்கெடுப்பில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அதிபர் ஜூமாவின் முன்னாள் மனைவியுமான நொக்காசசானா டிலாமினி-ஜுமாவை தோற்கடித்தார்.

டிலாமினி-ஜுமா 2,261 வாக்குகளை பெற்றிருந்த நிலையில் 2,440 வாக்குகளை பெற்ற ராமபோசா வெற்றி பெற்றதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Cyril Ramaphosa greets an ANC member during the party conference in Johannesburg on Monday.

தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் மாநாட்டுப் பிரதிநிதிகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here