ஏமனிலிருந்து சவூதி நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையில் ஈரான் சின்னம்!

0
181
Yemen Militants Missile Attack America Accusing Iran

(Yemen Militants Missile Attack America Accusing Iran)

உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வரும் ஏமனில், அரசுப்படைகளுக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஹவுத்தி போராளிக்குழுவுக்கு ஆதரவாக ஈரானும் களமிறங்கி சண்டையிட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் சவூதி அரேபிய மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல் யாமாமா அரண்மனையை குறித்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் ஏமனிலிருந்து நடத்தப்பட்டது.

ரியாத்தை தாக்குவதற்காக ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையில் இரான் சின்னம் இருந்ததாக ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார்.

Yemen Militants Missile Attack America Accusing Iran

இந்த ஏவுகணை தாக்குதல் முயற்சி செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது. ஆனால், இந்த ஏவுகணையை செளதி அரேபியா இடைமறித்து அழித்தது.

மன்னரின் தலைமையகம் மற்றும் அரசவை அமைந்துள்ள அல்-யாமாமா அரண்மனையை குறிவைத்து புர்கான் ஹெச்-2 பேலிஸ்டிக் ஏவுகணையைக் கொண்டு இத்தாக்குதல் நடந்தப்பட்டதாக அல் – யாசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

செளதியை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை

நியூயார்க்கில் உள்ள ஐ.நா பாதுகாப்பு சபையில் பேசிய ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, முன்பு ஈரான் கொடுத்த ஆயுதங்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் என்ன சின்னம் இருந்ததோ, அதே சின்னம் இந்த ஏவுகணையிலும் இருந்தது என்றார்.

எனினும் ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here