அமெரிக்காவின் சொற்ப டாலர்களுக்கு ஆசைப்பட்டு ஜனநாயகத்தை விற்றுவிடாதீர்கள்! நாடுகளுக்கு துருக்கி அதிபர் அட்வைஸ்!

0
194
Turkey President Erdogan Says US Cannot Buy Turkish Support

(Turkey President Erdogan Says US Cannot Buy Turkish Support)

ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந் திகதி அறிவித்தார். அதை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது.

டிரம்ப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் வாக்களித்தன.

இந்நிலையில், தனது முடிவை எதிர்த்து வாக்களித்த நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளை மறுசீராய்வு செய்ய நேரிடும் என்னும் பாணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா தரும் சொற்ப டாலர்களுக்காக ஆசைப்பட்டு உங்கள் நாட்டின் ஜனநாயகத்தை அமெரிக்காவிடம் விற்று விடாதீர்கள் என உலக தலைவர்களை துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Turkey President Erdogan Says US Cannot Buy Turkish Support

ஜனநாயகத்தின் தொட்டில் என்று தன்னைத்தானே அழைத்துகொண்டு, உலகின் எந்த பகுதியிலும் தனது விருப்பத்தை டாலர்களால் வாங்கி விடலாம் என்னும் அமெரிக்காவின் எண்ணம் ஐ.நா. தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஜெருசலேம் தொடர்பான அறிவிப்பை டொனால்ட் டிரம்ப் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

சொற்ப டாலர்களுக்காக ஜனநாயகத்தை அமெரிக்காவிடம் விற்று விடாதீர்கள் என உலக நாடுகளை நான் கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here