பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!

0
146
Pakistan Balochistan Province Bomb Blast 6 People Died

(Pakistan Balochistan Province Bomb Blast 6 People Died)

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் சனாவுல்லா ஜெரி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், முதலமைச்சர் ஜெரி திடீரென தன் பதவியை ராஜினாமா செய்ததால் சட்டமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டதால் குவெட்டாவில் உள்ள சட்டமன்ற கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சட்டசபையை சுற்றி 300 மீட்டர் சுற்றளவுக்கு உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் பதவி விலகிய சிறிது நேரத்தில் சட்டசபை அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் 4 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

The attacker, who was on foot, aimed to attack the parliament building [Banaras Khan/AFP]

இது போலீசாரின் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here