ஜெர்மனியில் அழகாய் இருந்தாலே போதும் தேர்தலில் வென்றுவிடலாம்! அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!

0
240
German Research Says Candidates Beauty Influences Election Results

(German Research Says Candidates Beauty Influences Election Results)

ஜேர்மன் தேர்தலில் அரசியல்வாதிகளின் அழகு முக்கிய செல்வாக்கு செலுத்துவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகின்றது.

கடந்த செப்டம்பர் நடைபெற்ற பெடரல் தேர்தலில் FDP தலைவரான Christian லிண்ட்னெர் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த வெற்றியின் பின்னணியில் உள்ள விடயம் என்ன தெரியுமா?

Christian Lindner (FDP).

கடந்த 2013 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்தபிறகு, FDP கட்சி தனது இளம் தலைவரின் கவர்ச்சிகரமான கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அதிகம் இடம்பெற்ற பிரச்சாரங்களையே பெரிதும் நம்பி கடந்த தேர்தலில் 10.7 சதவிகிகிதம் வாக்குகளைப் பெற்றது.

சமூகவியலாளர் Ulrich Rosar மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர், சமீபத்தில் இல் தங்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் ஒரு அரசியல்வாதியின் தோற்றத்திற்கும் அவருக்கு கிடைக்கும் வாக்குகளுக்கும் கணிசமான அளவில் தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி அந்த ஆய்வில் கூறப்பட்ட முக்கிய விடயமாக , வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல் பெரும்பாலும் குறைந்த நேரத்திலேயே முடிவெடுக்கப்படுகிறது. குழப்பமான அரசியல் பிரச்சினைகளைக் குறித்த திட்டமான மற்றும் நம்பகமான விவரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், வேட்பாளர்களின் பதவிக்கு சற்றும் தேவையற்ற குணாதிசயங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன என கூறப்பட்டுள்ளது.

வழமையாகவே ஜெர்மனியின் தேர்தல் முடிவுகளில் வேட்பாளரின் புற தோற்றம் செல்வாக்கு செலுத்துவதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டி காட்டியுள்ளது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here