மீண்டும் ஈரான் மீது அமெரிக்க புதிய தடைகள்?

0
162
America Again Forcing New Bans Over Iran Government

(America Again Forcing New Bans Over Iran Government)

ஈரான் மீது புதிய தடைகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதிக்க வேண்டும் என தாம் எதிர்பார்பதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவ் மனூஷின் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதுள்ள பொருளாதார தடைகளை தள்ளுபடி செய்வது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் டிரம்ப் முடிவெடுக்க வேண்டும் என்று வந்த தகவலையடுத்து ஸ்டீவ் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னதாக, சர்வதேச பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஒப்பந்தத்தை டிரம்ப் ஆதரிக்க வேண்டும் என ஐரோப்பிய சக்திகள் வலியுறுத்தி இருந்தன.

ஈரான் தனது அணுசக்தி எரிபொருள் உற்பத்தியை குறைத்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டதையடுத்து பொருளாதார தடைகள் நீக்கப்பட்டதை, டிரம்ப் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ், ஈரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என தாம் எதிர்பார்பதாக கூறினார்.

முன்னதாக ஈரான் நாட்டின் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க செய்திகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here