குடியேற்றவாசிகளை மோசமாக திட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

0
283
President Donald Trump Calls Ash holes Immigrants Badly

(President Donald Trump Calls Ash holes Immigrants Badly)

அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வசைச் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள, அதிபரின் ஓவல் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அவர், “இந்த மலத்துளை நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளவர்களை நாம் ஏன் வைத்திருக்கிறோம்?” என்று கூறினார் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைத்தி, எல் சால்வடோர் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களை குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.

President Donald Trump Calls Ash holes Immigrants Badly

பிற அமெரிக்க ஊடகங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டள்ள இந்த செய்தி குறித்து வெள்ளை மாளிகை இதுவரை மறுப்பு எதையும் வெளியிடவில்லை.

அமெரிக்க மற்றும் வெளிநாட்டவர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு குடியேற்ற உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக அவரைச் சந்திக்க சென்றபோது, டிரம்ப் அவ்வாறு கூறியுள்ளார்.

எல் சால்வடோர் நாட்டைச் சேர்ந்த சுமார் 2,00,000 பேருக்கு அமெரிக்காவில் வசிக்க மற்றும் பணியாற்ற வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா இந்த வாரம் ரத்து செய்தது.

ஹைத்தி மற்றும் நிகரகுவா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அந்தஸ்து ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டுக் குடியேறிகள் நாடுகடத்தப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here