வடகொரியாவில் உணவு பஞ்சம்! மக்கள் என்ன உண்கிறார்கள் தெரியுமா?

0
5840
North Korea Cook Special Foods Manage Food Shortage

(North Korea Cook Special Foods Manage Food Shortage)

உலக நாடுகளின் தடையால் வட கொரியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் உணவுப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தொடர் ஏவுகணை மற்றும் அணு சோதனையின் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக உலக நாடுகள் மற்றும் ஐ. நா பாதுகாப்பு விதித்துள்ள பல தடைகளை வட கொரியா எதிர்கொண்டுள்ளது.

வட கொரியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் விதிக்கப்பட்டுள்ள தடைகளால், வட கொரிய மக்களுக்கு போதுமான அளவிற்கு உணவு கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் உணவு பற்றாக்குறையை சமாளிக்க வட கொரிய மக்கள் புதிய உணவு வகைகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

வட கொரியாவில், கடந்த பல ஆண்டுகளாக உணவு பற்றாக்குறையாக இருப்பது ஒரு பொதுவான விஷயமாக மாறிவிட்டது. அதனால் தான் இங்குள்ள மக்கள் வெவ்வேறு விதமாகச் சமையல் முறைகளைக் கண்டுபிடித்தனர்.

அவர்களின் விசேட உணவுகள் இதோ :

வட கொரிய

இதன் பெயர் ஸ்பீட் கேக். இந்த சிற்றுண்டியை சமைக்கத் தேவையில்லை. சில நிமிடங்களில் செய்யலாம். சோளத்தில் இருந்து செய்யப்படும் இந்த உணவு அரிசியை விட விலை குறைவானது.


வட கொரிய

மனிதன் தயாரித்த கறி என கூறப்படும் இந்த உணவு, சோயா எண்ணெய் உற்பத்தியின் போது கிடைக்கும் சக்கையில் இருந்து செய்யப்படுகிறது. இந்த சக்கையினை வழக்கமாகப் பன்றிகளுக்கு உணவாகப் போடுவார்கள்.


வட கொரிய

சோயாபீனில் இருந்து தயாரிக்கப்படும் டோஃப்புக்கள் முக்கோண வடிவில் மடிக்கப்பட்டு, அரிசி மற்றும் மிளகாய் சார்ஸால் நிரப்பட்டிருக்கும்.


வட கொரிய

மாவு, ஈஸ்ட், சர்க்கரை மற்றும் திராட்சை குளுக்கோஸினால் தயாரிக்கப்படும் இந்த பிஸ்கட் செய்யப்படுகிறது. சக்கரை பற்றாக்குறையாக இருந்தால், பழங்களில் இருந்து குளுக்கோஸ் தயாரிப்பார்கள்.


வட கொரிய

பன்றி ரத்தத்துடன் காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்றவை கலந்து இந்த உணவு தயாரிக்கப்படுகிறது.

வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்குத் தப்பித்து வந்தவர்கள், உணவு பற்றாக்குறை நேரத்தில் வட கொரிய மக்கள் தயாரிக்கும் உணவைச் செய்து காண்பித்தனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

சென்னையில் வளர்ப்பு நாய்களின் கொலைவெறி தாக்குதலில் எசமானி பலி!

அமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி! (படம் இணைப்பு)

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here